About Us

முன்னுரை

புண்ணிய பூமியாம் ஞானத்தாயாம் பாரத தேசத்தின் தமிழகத்தில், திருச்சிராப்பள்ளி மாநகரத்தில், கண்டோன்மெண்ட் பகுதியில் தலைமை தபால் நிலைய வளாகத்தில் ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில் 1938ம் ஆண்டு புதுக்கோட்டை மன்னரின் நினைவாக துரைராணி அம்மாள் அவர்களின் மூலமாக பராமரிக்கப்பட்டு பின்னர் Y.A.M. ஆறுமுகம் என்கிற நித்திய கல்யாண பாகவதர் தம் சுய நளமில்லா சிரத்தை மிகு பக்தியில் பஜனைபாடி அனைவரையும் தாளத்தாலும் கீர்த்தனையாலும் கவர்ந்து நடத்தி வந்தார். பாகவதர் முக்தி அடைந்த பின் அவரது குமாரர் திரு .அ.ராமச்சந்திரன் பரம்பரை அறங்காவலராக இருந்து சிறப்பாக சிறப்பான முறையில் உத்ஸவங்கள் நடந்து வந்தன. தற்பொழுது அவருடைய குமாரர்கள் திரு.சுரேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் திருக்கோயிலின் அர்ச்சகராக இருந்து வெகு விமரிசையாக கீழ்கண்ட உத்ஸவங்கள் நடைபெறுகின்றன.

1. மாதாந்திர மூல நட்சத்திரம் மற்றும் அன்னதானம்.

2. புரட்டாசி உத்ஸவம் - சிறப்பு அலங்காரம்.

3. ஸ்ரீ ஹனுமந் ஜெயந்தி - 10,008 வடமாலை

4. வைகுந்த ஏகாதேசி பெருவிழா - அன்னதானம்

5. ஸ்ரீராம நவமி திருக்கல்யாணம் மங்கள நிகழ்ச்சியாக நடைபெறுகின்றன. தண்ணீர் பந்தல், திருவிளக்கு பூஜை,சத்சங்கம் போன்றவை சமயநெறி காக்க உலக நன்மைக்காக நடைபெறுகின்றது.

ஸ்ரீராமச்சந்திர பிரபுவின் ஆசிர்வாதம் பெற்ற ஆஞ்சநேயரின் பக்தி அளப்பரியது. அவனே உண்மையான பக்திமான், புலனடக்கம், மனத்தூய்மை, பரநலத்தொண்டு, தியாகம், பிரம்மச்சரியம், இந்திரிய சுகத்தில் நாட்டமின்மை, பேரிரக்கம், பயன் கருதாச்செயல், யான், எனது, என்னும் செருக்கற்ற தன்மை, ஆண்மை, தெளிந்த ஞானம், காமம் அகன்ற பேருணர்வு ஆகிய முழு மொத்த பண்பும் ஸ்ரீ ஆஞ்சநேயர் பெற்றிருப்பது ஸ்ரீராமபக்தன் ஆனான். எனவே நாமும் ஆஞ்சநேயர் துதி பாடி வழிபாடு செய்து வினைவென்று ஸகல செளபாக்யங்களும் பெற்று மங்கள வாழ்வு வாழ்வோமாக !

ஆஞ்ஜநேய காயத்ரீ

ஓம் ஆஞ்ஜநேயாய வித்மஹே
மஹா வீராய தீ மஹி
தன்னோ ஹநுமத் ப்ரசோத யாத்!!
அஞ்ஞானதேவியின் மகனான ஹனுமானை வணங்குவோமாக. மாவீரரான அவரைத் தியானிப் போமாக. நம்மை அவர் நல்வழியில் தூண்டட்டும்.
ஆஞ்சனேய வீரா அனுமந்த சூரா
வாயு குமாரா வானர வீரா
மஹானுபாவா ஸ்ரீஹனுமந்தா